29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

அரியக்குடி பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் – “விஜய் எங்கள் வீட்டுப் பிள்ளை” : பிரேமலதா

🔥 Views : 12
👁 Reading Now : 35

செய்தி : எம்.முருகன்



அரியக்குடி பெருமாள் கோவிலில் நேற்று தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயம் செய்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர்,

“விஜய் எங்கள் வீட்டுப் பிள்ளை. விஜயகாந்த் மக்கள் மனதிலும் ரசிகர்களின் மனதிலும் என்றும் தெய்வமாக வாழ்ந்து வருகிறார். அவரை யாரும் மறக்கவில்லை. நாங்களும் அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு வருகிறோம்.

அரசியல் மற்றும் சமூகத்திலும், மற்ற சமயங்களிலும் ஏழைகளுக்கான உதவிகளை விஜயகாந்த் அறக்கட்டளை சார்பாக செய்து வந்துகொண்டு இருக்கிறோம்.

தேர்தல் காலத்தில் எவர் கூட்டணி என்பதனை நாங்களே தெரிவிப்போம். நீங்கள் கற்பனை செய்ய வேண்டியதில்லை; கற்பனைக்கு இடமே இல்லை.

விஜய் இன்று வரை என் மகனாகவே அவரைப் பார்த்து வருகிறோம். இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,” என தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles