26.4 C
Kuala Lumpur
Friday, July 24, 2026

Vetri

கிளாங் ஆற்றில் அடித்துச் சென்ற ஆணின் உடல் ஷா ஆலாமில் கண்டுபிடிப்பு!

🔥 Views : 26
👁 Reading Now : 56

செய்தி : கோபி

கடந்த ஞாயிறு சாலோமா லிங்க் அருகே கிளாங் ஆற்றில் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் இன்று ஷா ஆலாம், கம்போங் சுங்கை கண்டிஸ் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சாலஹி ஆடம் உதவிக் கமிஷனர் சசாலி ஆடம், அந்த ஆணின் உடல் இன்று காலை சுமார் 10.30 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தினார்.

அவரின் தகவலின்படி, சம்பவம் பற்றிய மேலதிக தகவல்களை வழங்குவதற்காக போலீசார் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளனர்.

“உயிரிழந்தவரின் உடல் மருத்துவ பரிசோதனைகளுக்காக ஷா ஆலாம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படும்,” என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles