29.4 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

போலீஸ் சோதனையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கார் விபத்து!

🔥 Views : 7
👁 Reading Now : 38

செய்தி / படங்கள் : கோபி
இன்று மதியம் 12 மணியளவில் ஜலான் சவுகிட் பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு கார் செல்கிறது என்பதைக் கவனித்த போலீசார் அதனை நிறுத்த முயன்றனர். அந்த நேரத்தில், ஓட்டுநர் போலீஸ் வாகனத்தை மோதி தள்ளி தப்பிச் செல்ல முயன்றார்.

அதன்பின் அந்த கார் ஜலான் கூச்சிங் வழியாக ஜலான் பார்லிமென்ட் நோக்கி சென்றது. அங்கு வந்தபோது, காரை ஓட்டியவர் திடீரென வாகனத்தை விட்டு குதித்து ஓடி தப்பிக்க முயன்றார். கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதிச் சேதமானது.

காரில் இருந்த மற்றொரு ஆடவர் அருகில் உள்ள காட்டு பகுதியில் ஓடி ஒளிந்துகொண்டார். பின்னர் போலீசார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், காரை ஒட்டி வந்தவரும், காட்டினுள் மறைந்திருந்த ர ஆடவரும் மற்றொரு ஆடவரும் பிடிபட்டனர்.

“போலீசார் நிறுத்த அறிவித்தும் ஏன் நிற்காமல் ஓட்டிச் சென்றனர் என்பது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன,” என டாங் வாங்கி மாவட்ட உதவி போலீஸ் ஆணையர் (ACP) சசிலி தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles