29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

களத்தூர் மக்களுக்கு சாலை வசதி கோரி மறியல் போராட்டம் – “வாக்களிக்க மட்டும் நாங்கள் தேவையா?”

🔥 Views : 13
👁 Reading Now : 34

செய்தி / படங்கள் : எம்.முருகன்
களத்தூர் மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தக் கோரி நடத்தப்பட்ட மறியல் போராட்டம் இன்று மதுரை–தொண்டி சாலையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.

களத்தூர் கிராமத்திற்கு சாலை வசதி இல்லை என்பதையும், இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகளும் அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுக்காததை மக்கள் கண்டனம் தெரிவித்தனர்.

“வாக்களிக்க மட்டும் நாங்கள் தேவையா? எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது யார்?” என்று பொதுமக்கள் போராட்டத்தின் மூலம் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles