28.7 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

மலேசிய தமிழர் இயக்கம் பல ஆண்டுகளாக மக்கள் சேவையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது!

🔥 Views : 10
👁 Reading Now : 69

மலேசிய தமிழர் இயக்கம் கடந்த பல ஆண்டுகளாக எந்த அரசியல் கட்சியையும் சாராமல், தனித்துவமான சமூக இயக்கமாக செயல்பட்டு மக்களுக்கு சேவை செய்து வருகிறது. இவ்வியக்கத்தில் அதிகமான உறுப்பினர்கள் இணைந்து சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றி வருகின்றனர்.

இயக்கத்தின் தலைவர் என்ற முறையில், இதுவரை பல்வேறு சேவை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுவதுடன், உள்நாட்டு கலைஞர்களின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

“சமூகத்தின் அடித்தள மக்களை முன்னேற்றுவது எங்களின் முதன்மை நோக்கம். கலை, கலாச்சாரம் மற்றும் மனிதநேய சேவைகள் மூலமாக சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கி வருகிறோம்,” என அவர் கூறினார்.

எதிர்காலத்திலும் இந்த சேவைப் பணிகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும், மலேசிய தமிழர் இயக்கம் மக்களுக்கான நம்பகமான சேவை இயக்கமாக தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles