
காரைக்குடி தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜான் கென்னடி சார்லஸ் அவர்களின் இல்லத்தில், கிறிஸ்துமஸ் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் குடும்ப நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் ஜான் கென்னடி சார்லஸ் அவர்களின் குடும்பத்தினர் அன்புடன் வரவேற்பு அளித்தனர். விழாவின் ஒரு பகுதியாக விருந்து உபசரிப்பும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில், தமிழ் மாநில காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு, கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

விழாவில் உரையாற்றிய ஜான் கென்னடி சார்லஸ் அவர்கள்,
“என் இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புனித நாளில், அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். கிறிஸ்துமஸ் என்பது உறவுகளை ஒன்றிணைக்கும் திருநாளாகும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, சகோதர மனப்பான்மையுடன் வாழ வேண்டும். ஆண்டவர் எப்போதும் நம்முடன் இருப்பார். என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்து வருவேன்,” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது. மேலும், ஜான் கென்னடி சார்லஸ் குடும்பத்தினருக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அன்பு பரிசுகளை வழங்கினர். இதற்காக ஜான் கென்னடி சார்லஸ் குடும்பத்தினர் அனைவருக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

