29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

பங்கோர் பத்திரகாளியம்மன் ஆலய திருவிழா; பக்தி எழுச்சியுடன் பிரமாண்டமாக நடைபெற்றது!

🔥 Views : 10
👁 Reading Now : 40

செய்தி / படங்கள் : எம்.முருகன்
பங்கோர் அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் திருவிழா இந்த ஆண்டு பக்தி பரவசத்துடனும் பெரும் கோலாகலத்துடனும் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெய்வ அருளைப் பெற்றனர்.

இந்த திருவிழாவில் மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) துணைத்தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

அவரை தொழிலதிபர் சுரேஷ் அவர்கள் அன்புடன் வரவேற்று சிறப்பு செய்தார். இந்த நிகழ்வில் சுரேஷ் அவர்களின் குடும்பத்தினரும், பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த தொழிலதிபர் சுரேஷ்,
“இந்த ஆண்டில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் ஆலய திருவிழாவிற்கு திரண்டுள்ளனர். குறிப்பாக, மஇகா துணைத்தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் அவர்கள் வருகை தந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்ட இந்த ஆலய திருவிழா, ஆன்மீக உற்சாகத்துடனும் ஒற்றுமையுடனும் சிறப்பாக நடைபெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles