29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

காஜங் பள்ளிவாசலில் நோன்பு பெருநாள் அன்பளிப்பு; டத்தோ அப்துல் ஹமீட் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது!

🔥 Views : 12
👁 Reading Now : 56

செய்தி / படங்கள் : எம்.முருகன்
காஜங் பள்ளிவாசலில், ஏசான் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ அப்துல் ஹமீட் அவர்களின் தலைமையில் நோன்பு பெருநாள் அன்பளிப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். குறிப்பாக, ஆதரவற்ற இல்லங்களில் வசிப்போர், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை குடும்பங்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினருக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த அன்பளிப்புகளை ஏசான் நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ அப்துல் ஹமீட் அவர்கள் நேரில் வழங்கினார். இந்நிகழ்வில் டத்தோ ஜவஹர் அலி உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய டத்தோ அப்துல் ஹமீட் அவர்கள்,
“ஒவ்வொரு ஆண்டும் எங்கள் நிறுவனத்தின் மூலம் நோன்பு பெருநாளை முன்னிட்டு உதவிகள் வழங்கி வருகிறோம். நோன்பு பெருநாளை அனைவரும் எளிமையாகவும் சகோதரத்துவ உணர்வுடனும் கொண்டாட வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பும் ஒற்றுமையும் காட்டி, ஏழைகளுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்,” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வு, சமூக ஒற்றுமையையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles