34 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

கோலாலம்பூர் தேசிய பள்ளிவாசலில் டத்தோ ஜெகவர் அலி தலைமையில் 3,000 பேருக்கு உதவி!

🔥 Views : 10
👁 Reading Now : 54

செய்தி / படங்கள் : எம். முருகன்
டத்தோ ஜெகவர் அலி தலைமையில், கோலாலம்பூர் தேசிய (பெரிய) பள்ளிவாசலில் நோன்பு பெருநாள் அன்பளிப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ அயூப் கான் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும், ஆதரவற்ற இல்லங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் போது 3,000 பேருக்கும் மேற்பட்டோருக்கு நோன்பு பெருநாளை முன்னிட்டு அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்பட்டன. சமூகத்தின் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு உதவியாக இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் உரையாற்றிய டத்தோ ஜெகவர் அலி,
“இந்த நோன்பு பெருநாளை முன்னிட்டு இன்று 3,000-க்கும் மேற்பட்டோருக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைவரும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவ உணர்வுடனும் இந்த பெருநாளை கொண்டாட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு சமூக நலன் கருதி இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்,” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வு, சமூக ஒற்றுமையையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்தும் வகையில் பெரும் மக்களின் பாராட்டைப் பெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles