25.3 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் “நாம் தமிழர் கட்சியை” தேர்ந்தெடுக்க வேண்டும் – உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வேண்டுகோள்!

உலகத் தமிழினம் பாதுகாப்பாக இருக்க, தமிழக மக்கள் துயரின்றி வளமாக வாழ, தமிழருக்கென்று தனித்த அரசியல் அதிகாரம் நிறுவ, உலகத் தமிழர்களின் தாயக மண்ணான தமிழக மண்ணில் தமிழர் ஆட்சி மலர, தமிழகத் தமிழர்கள் தமிழ் தேசியம் வழிநின்று வாக்களிக்க வேண்டும் என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன் வீராசாமி வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு அடித்தளம் அமைத்து, மண்ணையும் மக்களையும் காக்க, அனைத்து உயிருக்குமான அரசியலை முன்னெடுக்கும் தமிழக நாம் தமிழர் கட்சி சமரசமின்றி தனித்து நிற்கையில், வருகிற ஏப்ரல் 23-ஆம் திகதி நடைபெறவுள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலில் அவர்களது “விவசாயி” சின்னத்தில் மாபெரும் வெற்றியை பெற வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் விருப்பம் என தெரிவித்தார்.

சுமார் அரை நூற்றாண்டு காலமாக தமிழர் மண்ணை ஆரிய திராவிட சித்தாந்தம் ஆள விட்டதால், தமிழர் தாயகத்தின் இயற்கை வளங்கள் எல்லாம் சூறையாடப்பட்டு, தமிழர்கள் உரிமை உடமைகளை இழந்து சாதிக்கும் மதத்திற்கும் மதுவிற்கும் இலவசத்திற்கும் தற்போது திரைக்கவர்ச்சிக்கும் அடிமையானதுதான் மிச்சம்.

உலகிற்கே அன்னமிட்ட தமிழர் தாய் நிலத்தை அழிக்க மீத்தேன், நியூட்ரோ, செதெர்லைட், கெயில் எரிவாயு, அய்ட்ரோ கார்பன், பெட்ரோ கெமிக்கல், கூடங்குளம் அணுவுலை போன்ற இம்மண்ணை மடலாக்கும் எண்ணற்ற தீய அபாயகர திட்டங்களை கையெழுத்திட்டு வரவேற்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம், முல்லைப் பெரியாறு, பாலாறு, பவானி ஆற்று நீர் உரிமை, நீட் தேர்வு, விவசாயி கடன், மீனவர் பாதிப்பு போன்ற எண்ணிலடங்கா வாழ்வுரிமை போராட்டங்களுக்காக தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சிக்கப்பட வைத்தனர்.

செம்மொழி தமிழாய்வு மையத்தை முடக்கியது, ஆர்வர்ட் பல்கலைக்கழக தமிழர் இருக்கை அமைய இடையூறு செய்தது, தமிழரின் வரலாற்று அடையாளமான கீழடியை மூடியது, வெள்ளம், காசா புயல், யோகி புயல் போன்ற இயற்கை பேரிடரால் தமிழகம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் உரிய நிவாரணத்தை தட்டி கேட்டு பெற முடியாத கையாலாகாத அரசாகத்தான் இருந்தது.

இந்தி திணிப்பு, விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, காவல்துறை அடக்குமுறைகள், புதிய மீன்பிடி கொள்கை, குடியுரிமை சட்ட மசோதா, பணமதிப்பிழப்பு, GST வரி மற்றும் வரி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேசு சிலிண்டர் விலை உயர்வு, 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, எட்டுவழிச்சாலை, வேளாண் மசோதா, தமிழக பணியில் வட இந்தியர் நியமனம், குலக்கல்வி என புதிய கல்வி கொள்கை, டெல்டா பகுதிகள் கார்ப்ரேட்டுகளுக்கு தானம், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம் போன்ற கணக்கிட முடியாத நாசகார செயல்களை கடந்து விட முடியாது.

இவை அனைத்தையும் விட தமிழர் இரண்டாவது தாயக மண்ணான தமிழீழத்தின் தொப்புள் கொடி உறவுகளை சிங்கள இனவெறிக்கு காவ கொடுத்து அமைதி காத்தது, ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொன்றதற்கு கேள்வி எழுப்பாதது, சிங்கள கடற்படையினரால் 850 மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு நீதியை கேட்காது, சல்லிக்கட்டு போராட்டத்தில் தானே கலவரம் தூண்டி மாணவர்களை அடித்தது, தமிழக கூலி தொழிலாளியை நிர்வாணமாக்கி கன்னட வனத்துறை அதிகாரிகள் அடித்தது, காவிரி சிக்கலில் தமிழக கனரக ஓட்டுனர்கள் மற்றும் அங்கு வசிக்கும் தமிழர்களை அடித்தது, தமிழக பெண்ணை கேரளா இளைஞர்கள் கலங்கப்படுத்தியது, தூத்துக்குடி துப்பாக்கிச் சுட்டுக் படுகொலை, ஆளும்கட்சி அதிகாரத்தில் பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் சாத்தான் காவல்நிலைய மரணம் போன்ற இன்னும் எத்தனையோ கொடுமைகளை காலம் கடந்தாலும் உலகத் தமிழர்கள் மறந்து விட மாட்டார்கள் என்றார் திரு பாலமுருகன்.

பசி, பஞ்சம், ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, சாதியை இழிவு, தீண்டாமை கொடுமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை, பெண்ணிய அடிமைத்தனம், பாலியல் வன்கொடுமை, வளக்கொள்ளை, மது, மத, போதை இவை ஏதுமற்ற புதிய தேசத்தை படைக்க, மாற்றத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும்.

ஆகவே, தமிழக தமிழர்களுக்கு ஒரே கடைசி வாய்பாக ஓட்டுரிமை வழி நமது இனம், மொழி, சமயம் பண்பாடு, உரிமை, உடமை, பாதுகாப்பு, வாழ்வாதாரம் போன்றவற்றில் மீட்சி பெற தமிழாய்ந்த தமிழர்கள்தான் தமிழர் மண்ணை ஆள வேண்டும்.

உலகையே ஆண்ட பரம்பரையை வழி வந்த தமிழர்கள் தற்போது தமிழர் மாநில மண்ணையாவது ஆள தமிழக மக்கள் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும், நம்மிலிருந்து வந்த எளிய பிள்ளைகளான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்து நாளைய தலைமுறை பிள்ளைகள் நல்வாழ்வுக்காக விருப்பு வெறுப்பின்றி தமிழர் தேசிய இன மகனாய் உழைக்க வேண்டும். அதற்கு உலகத் தமிழர்கள் அனைத்து வகையிலும் துணை நிற்க வேண்டும். அவ்வரிசையில் மலேசிய தமிழர்கள் சார்பில் சில விழிப்புணர்வு முன்னெடுப்புகளை செய்து வருவதையும் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles