
மோசமடைந்து வரும் மத்திய கிழக்கின் போர் தாக்கத்தின் காரணமாக மலேசியர்கள் புத்திசாலித்தனமாக செலவு செய்ய வேண்டும் என மலேசிய பயனீட்டாளர்கள் சங்கங்களின் சம்மேளனம்
(போம்கா) ஆலோசனை கூறியது.
பொருட்களின் வெளியேற்றத்தை கருத்தில் கொண்டு மலேசியர்கள் பொறுப்புடன் தங்களின் பங்கை ஆற்ற வேண்டும் என
போம்கா தலைவர் டத்தோ டாக்டர் மாரிமுத்து நடேசன் கூறினார்.
பொருட்களை வாங்கும் பதற்றம் மற்றும் நிதியை மோசமாக திட்டமிடுதல் பழக்கங்கள் நிலைமையை குழப்ப நிலைக்கு கொண்டு செல்லும் என அவர் நினைவுறுத்தினார்.
‘தற்போதைய நிலையில் மக்கள் பீதி அடைய கூடாது. பீதிடைந்தால் நிலைமை மேலும் மோசம் அடையும்’ என்றார் அவர்.
தற்போதைய நிலையில் மக்கள் செலவு செய்யும் பழக்கத்தை சற்று சரி செய்து கொள்ள வேண்டும் . தற்போதைய நிலைக்கு இது மிக அவசியம் என அவர் நினைவுறுத்தினார்.
‘நமக்கு வேண்டும் என்பதை விட, நமது தேவைக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும்’ என அவர் தெரிவித்தார்.
‘குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களின் நிதியை கவனமாக நிர்வகிக்க வேண்டும். தற்போதைய நிலைக்கு இது தான் பயனீடாளர் மந்திரம்’ என அவர் தெரிவித்தார்.
குறிப்பாக உணவு செலவுகளை நிர்வகிக்க வேண்டும். வீட்டில் சமைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாரத்திற்கு ஒரு முறை பொருட்களை வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் வழி அதிகமாக செலவு செய்வதை தவிர்க்கலாம் என அவர் குறிப்பிட்டார்.
பயனீட்டாளர்கள் உள்ளூர் தயாரிப்பு பொருட்களுக்கு ஆதரவு தர வேண்டும். சிறு வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவு தர வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
எண்ணெய் செலவினத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான குடும்பங்களுக்கு இது மிகவும் முக்கிய செலவாகும்.
மேலும் இப்பொழுது வாங்கி பிறகு பணம் செலுத்தலாம் திட்டங்களுக்கு தற்போது நிலையில் மலேசியர்கள் தவிர்த்துக் கொள்வது நல்லது.
அதே வேளையில் விலை கையாளுதல் உபகாரங்களில் மலேசியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இது தொடர்பாக தேசிய பயனீட்டாளர் புகார் மையம் அல்லது உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சிடம் மக்கள் புகார் செய்யலாம் என அவர் குறிப்பிட்டார்.
