25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

🚨 ஏப்ரல் 25 போராட்டம்: “உண்மையான தைரியம் காட்டுங்கள்” – ரபிசி ரம்லி

🔥 Views : 10
👁 Reading Now : 36

வரும் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறவுள்ள “அஸாம் பாக்கியைப் பிடி” (Tangkap Azam Baki) போராட்டத்தில் மக்கள் தங்கள் உண்மையான தைரியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ரபிசி ரம்லி அழைப்பு விடுத்துள்ளார்.

கோழைத்தனமாக ஆர்ப்பாட்டம் நடத்தும் குழுக்களை கடுமையாக விமர்சித்த அவர்,
“இந்த முறை நடைபெறும் போராட்டம் உண்மையானதாக இருக்க வேண்டும். மக்கள் தைரியமாக முன்னே வர வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.

இந்த போராட்டம், கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறவுள்ளது.

மேலும், அரசு ஊழியர்களுக்கான வரம்பை மீறியதாகக் கூறப்படும் பங்குடைமை விவகாரம் மற்றும் பெருநிறுவனங்களுடன் கூட்டுச் சதி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) தலைமை ஆணையர் அஸாம் பாகி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மலேசியா ஊழலற்ற நாடாக இருக்க வேண்டும். இதற்காக இளைஞர்கள் முன்வந்து போராட வேண்டும். நானும் மலேசியர்களுடன் சேர்ந்து இந்த போராட்டத்தில் பங்கேற்பேன்,” என்று ரபிசி ரம்லி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles