29 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

📊 RM131 மில்லியன் திட்டத்திற்கு பாராட்டு!

செலாங்கூர் மாநில அரசால் அறிவிக்கப்பட்ட RM131 மில்லியன் மதிப்பிலான “Selangor Pengukuhan Daya Tahan” (பொருளாதார வலுப்படுத்தல்) திட்டத்திற்கு, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு குணராஜ் ஜோர்ஜ் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை அறிவித்த செலாங்கூர் முதல்வர் டத்தோஸ்ரீ அமீருடின் ஷாரி மற்றும் மாநில நிர்வாகத்திற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

உலக பொருளாதார நிலையிலான அலைச்சல், எரிசக்தி நெருக்கடி, மேற்கு ஆசிய அரசியல் பதற்றம் ஆகிய சூழ்நிலைகளில், மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தின் கீழ்:

  • Jelajah Ehsan Rahmah
  • Gudang Makanan Selangor
  • Baucar Kita Selangor
  • பொதுப் போக்குவரத்து மானியம்
  • மாணவர்களுக்கு இலவச காலை உணவு
  • வேளாண்மை துறைக்கு ஆதரவு

போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவது மக்களின் நலனை பாதுகாக்கும் முயற்சியாகும் என அவர் தெரிவித்தார்.

மேலும், B40 மக்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோர்களுக்கு இந்த திட்டம் நேரடி நன்மை அளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“இந்த திட்டம் ஜூன் 2026 முதல் அமலுக்கு வரும் நிலையில், அதன் தகவல்கள் செந்தோசா மக்களிடம் முழுமையாக சென்றடைய நான் உறுதி செய்கிறேன்,” என்று அவர் கூறினார்.

அனைத்து சமூக தலைவர்களும், அரசு அமைப்புகளும் இணைந்து இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles