32.9 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

📰 மித்ராவிற்கு 150 மில்லியன் ரிங்கிட்: இந்திய சமூகத்திற்கு புதிய எழுச்சி – குணராஜ் வரவேற்பு

🔥 Views : 1,772
👁 Reading Now : 57

மித்ராவிற்கு 150 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கான மடானி அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் தெரிவித்துள்ளார்.

மித்ரா நிதி ஒதுக்கீட்டை 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தியிருப்பதாக அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமிற்கு தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.

“இந்த அறிவிப்பு இந்திய சமூகத்திற்கு ஒரு முக்கியமான வரலாற்றுத் தருணம். மித்ரா நிறுவப்பட்டதிலிருந்து, அது செடிக் என அழைக்கப்பட்ட காலத்தையும் சேர்த்து, அதன் ஆண்டு நிதி ஒதுக்கீடு ஒருபோதும் உயர்த்தப்படவில்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அது சுமார் 100 மில்லியன் ரிங்கிட்டாகவே இருந்து வந்தது,” என்று அவர் கூறினார்.

மேலும், கூடுதலாக வழங்கப்பட்டுள்ள 50 மில்லியன் ரிங்கிட், இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் மடானி அரசாங்கம் தொடர்ந்து அக்கறையுடன் செயல்படுவதை நிரூபிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த புதிய நிதி உயர்வின் மூலம் கல்வி, திறன் பயிற்சி, தொழில்முனைவோர் மேம்பாடு, சமூக நலன், இளைஞர் மற்றும் மகளிர் மேம்பாடு போன்ற துறைகளில் மேலும் பல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய சமூகத்தின் தேவைகளை அரசாங்கத்தின் உயர்மட்டத்திற்கு தொடர்ந்து கொண்டு சென்று வரும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

“இது முழு நம்பிக்கையுடனும் ஒற்றுமையுடனும் முன்னேற வேண்டிய தருணம். பிரதமரின் தலைமையில் இந்திய சமூகத்திற்கு மேலும் வளர்ச்சியும் புதிய வாய்ப்புகளும் உருவாகும்,” என்று குணராஜ் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles