32.9 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

“என் நண்பர் விஜய் முதலமைச்சரானது மகிழ்ச்சி” – அன்வார் இப்ராஹிம் வாழ்த்து

🔥 Views : 646
👁 Reading Now : 27

தமிழக முதலமைச்சராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்து செய்தியில், பல ஆண்டுகளாக விஜய்யின் ரசிகர்கள், திரையில் அவர் ஊழல் அரசியல்வாதிகளையும் பல்வேறு வில்லன்களையும் தோற்கடிப்பதை பார்த்து வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

“இப்போது தமிழக மக்கள், திரையில் அவர் ஏற்று நடித்த எந்த பாத்திரத்தையும் விட மிகப் பெரிய பொறுப்பை விஜய்யிடம் ஒப்படைத்துள்ளனர்,” என்று அன்வார் கூறினார்.

மேலும், “அவரின் ஒரு விரல் புரட்சி இன்று மிகப் பெரிய சரித்திரமாக மாறியுள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவும் தமிழகமும் பல தலைமுறைகளாக ஆழமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகளை பகிர்ந்து கொண்டுவருவதாகவும், எதிர்காலத்தில் முதலமைச்சர் விஜய்யுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அன்வார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles