27.5 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

Tiger Empower-மலர் டெய்லி AI பயிற்சிகள் 3 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்!

🔥 Views : 4,200
👁 Reading Now : 32
1.முதல் நிலைக்கு ரவாங்கை சேர்ந்த ரோஹினி சிவலிங்கம்
2. ரவீந்திரன் கோவிந்தன் இரண்டாம் நிலை
3. மூன்றாம் நிலைக்கு சந்ரிகா நாயுடு ராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹெனிக்கன் மார்க்கெட்டிங்கின் ஆதரவில் Tiger Empower மலர் டெய்லி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்ட டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயிற்சியில் கலந்து கொண்ட 18 பேரில் 3 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தாங்கள் செய்து வரும் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த பயிற்சி மிகவும் உதவுமென இவர்கள் கூறுகின்றனர்.

MAWEM அமைப்பு நடத்திய இந்த பயிற்சியில் முதல் நிலைக்கு சந்ரிகா நாயுடு ராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் Heavenly Baker’s Cakes கேக் தயாரிப்பு தொழிலை வீட்டிலிருந்தே செய்து வருகிறார். சமூக ஊடகம் மற்றும் வாய்வழி பரிந்துரைகள் மூலம் கடந்த 11 ஆண்டுகளாக இந்த தொழிலை தாம் செய்து வருவதாக இவர் கூறுகிறார்.
இந்த AI பயிற்சியில் கலந்து கொண்டதால் தமது தொழிலை மேலும் விரிவுபடுத்த நுணுக்கங்களை கற்றுக் கொண்டதாக இவர் குறிப்பிட்டார்.
இந்த மூன்று வெற்றியாளர்களும் அடுத்த கட்டமாக Podcast-லில் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வர்.

இந்த பயிற்சியில் ரவாங்கை சேர்ந்த ரோஹினி சிவலிங்கம் இரண்டாம் நிலைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
கடந்து இரண்டு ஆண்டுகளாக Syenthesis Leisure Cafe சுவை பான விற்பனையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
தேங்காய் பாலின் இயற்கை நன்மைகள் அடிப்படையாகக் கொண்டு தாவர பானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
இந்த பயிற்சி தமது தொழிலை மேலும் மேம்படுத்த தமக்கு உற்சாகத்தை தந்துள்ளதாக ரோஹினி கூறுகிறார்.

இந்த பயிற்சியில் பந்திங்கை சேர்ந்த ரவீந்திரன் கோவிந்தன் மூன்றாம் நிலைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
காளான் சாகுபடியில் முன்னோடியாக திகழ்ந்துவரும் இவர், இந்த பயிற்சி தமது தொழில் வளர்ச்சிக்கு துணை புரியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
விவசாயத்துறையில் பட்டப்படிப்பை பெற்றுள்ள இவர், காளான், மரவள்ளிக்கிழங்கு, காய்கறிகள் மற்றும் வெனிலா பீன் செடிகளை பயிர் செய்து வருகிறார்.
AI தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு Simply fresh farm நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக இவர் கூறுகிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles