31.4 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

தமிழக முதல்வர் விஜய்யை சந்திக்கலாம்! – செப்டம்பரில் இந்தியா பயணம் குறித்து அன்வார் தகவல்!

🔥 Views : 3,866
👁 Reading Now : 34

மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமிழக முதல்வர் விஜய்யுடன் இன்று தொலைபேசியில் உரையாடியதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடகங்களில் பதிவு வெளியிட்ட பிரதமர், “இன்று என் நண்பரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது,” என்று குறிப்பிட்டார்.

தமிழக மக்களிடையே விஜய் பெற்றுள்ள பெரும் நம்பிக்கைக்கு மீண்டும் வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காகவும் வரும் செப்டம்பர் மாதம் இந்தியா செல்லவுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.

“அந்த பயணத்தின் போது வாய்ப்பு கிடைத்தால் தமிழகத்திற்கும் குறுகிய பயணம் மேற்கொள்ள விருப்பம் உள்ளதாக விஜய்யிடம் தெரிவித்தேன்,” என்றார்.

தமிழக மக்களின் நலனுக்காகவும், மாநிலத்தின் சிறந்த எதிர்காலத்திற்காகவும் முதலமைச்சர் விஜய் தொடர்ந்து வலிமையுடன் வழிநடத்த வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, அன்வார் மற்றும் விஜய் இடையிலான சந்திப்பு அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles