27.8 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்ட 28 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்!

🔥 Views : 1,532
👁 Reading Now : 67

காசாவுக்கான Global Sumud Flotilla (GSF) 2.0 மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இஸ்ரேலிய ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்ட 28 மலேசியர்கள் நேற்று இரவு பாதுகாப்பாக நாடு திரும்பினர்.

இந்த மனிதாபிமான ஆர்வலர்கள், Sumud Nusantara Command Center (SNCC) இயக்குநர் ஜெனரல் சனி அரபி அப்துல் அலிம் அரபியுடன் இணைந்து, கடந்த சனிக்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் துருக்கியின் இஸ்தான்புல் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.

அவர்கள் துபாய் வழியாக பயணம் செய்து, நேற்று இரவு 9.30 மணியளவில் KLIA Terminal 1 விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, சிக் நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் தர்மிசி சுலைமான் மற்றும் 100-க்கும் மேற்பட்ட உறவினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் அவர்களை வரவேற்றனர்.

நாடு திரும்பிய தன்னார்வலர்களில் நோராஸ்மான் இஷாக், ஹரீஸ் அட்ஸ்ராமி, நோர் லியானா ஃபர்ஹான் தாவூத், ஜைனால் ரஷிட் அஹ்மத், அஹ்மத் மூசா அல்-நுவைரி கமருசாமான், ஹஸ்வான் ஹஸிம் டெர்மாவான், நோர்ஹெல்மி அப்துல் கானி, ஹனாஃபி சாலிம் மற்றும் ஷாம்சிர் இசா உள்ளிட்டோர் அடங்குகின்றனர்.

மேலும், ரெட்சால் அம்சா, ஸைட் அப்துல் கரிம், அல்-அஹ்மத் ஷா அப்துல் காதிர், ஃபரிஸ்ஸால் ரோஸ்டாம், சின் ஷியாவ் வேய், அப்துல் சமாட் சலாமட், ஷாஸ்லி ஷீஸ், தெங்கு அஹ்மத் தௌபிக் மற்றும் பலரும் இந்த மனிதாபிமானப் பணியில் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை, ரஸ்மான் மாட் அலி என்ற மற்றொரு பங்கேற்பாளர் தற்போது துருக்கியின் இஸ்தான்புல்லில் சிகிச்சை பெற்று வருகிறார். இஸ்ரேலிய படையினரால் தாக்கப்பட்டதில் அவரது நுரையீரலில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மே 18ஆம் தேதி சைப்ரஸ் கடற்பரப்புக்கு அருகே இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்ட 50 கப்பல்களில் மொத்தம் 430 மனிதாபிமான ஆர்வலர்கள் இருந்ததாகவும், அதில் 29 மலேசியர்கள் அடங்குவதாகவும் SNCC உறுதிப்படுத்தியிருந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles