27.6 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

ஜொகூர் மாநில தேர்தலை எதிர்கொள்ள தேசியக் கூட்டணி தயார்

🔥 Views : 2,359
👁 Reading Now : 60

ஜொகூர் மாநிலத் தேர்தலை   எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தேசியக் கூட்டணி உறுதி செய்துள்ளது.

அக்கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் சம்சுரி மொக்தார் இதனை கூறினார்.

தேசியக் கூட்டணி முழுப் பொறுப்பு, முதிர்ச்சி, தொழில்முறையுடன் ஜொகூர் மாநிலத் தேர்தல் களத்தில் நுழையும்.

மேலும் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும்.
வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தல் என்பது வெறும் அரசியல் போட்டி மட்டுமல்ல.

அது மக்களுக்கு, குறிப்பாக வாழ்க்கைச் செலவு, வேலை வாய்ப்புகள், மாநிலப் பொருளாதார வளர்ச்சி, நிர்வாக நேர்மை, நாட்டின் எதிர்காலம் போன்ற பிரச்சினைகளில் சிறந்த தீர்வுகளை வழங்குவதற்கான ஒரு களம் என்று அவர் கூறினார்.

மாநிலத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம் என்றும் அவர் கூறினார். – Nambikkai

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles