
தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (SME), அரசு சாரா அமைப்புகள் (NGO), வணிக சங்கங்கள் மற்றும் தொழில் வளர்ச்சியில் ஆர்வமுள்ள அனைவருக்கும் MUDRA Roadshow 2026 சிறந்த வாய்ப்பாக அமையவுள்ளது.
தொழில் நிதியுதவி, தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டங்கள், வணிக வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் அரசாங்கத்தின் பல்வேறு ஆதரவு முயற்சிகள் குறித்து நேரடியாக அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. தொழிலை விரிவுபடுத்த விரும்புவோர் மற்றும் புதிய தொழிலை தொடங்க நினைப்போருக்கு இந்த நிகழ்வு பயனுள்ளதாக இருந்தது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சிறப்பு விருந்தினராக சுரேஷ் ஆறுமுகம் கலந்து கொண்டார்.

இந்த சாலை நிகழ்ச்சி (Roadshow) ஜூன் 5, 2026 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.00 மணிக்கு செரம்பானில் அமைந்துள்ள கிளானா ரிசார்ட்டில் (Klana Resort Seremban) நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு நிறுவனங்கள், தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் நிதி வசதி வழங்கும் தரப்புகள் கலந்து கொண்டு விளக்கமளித்த்தனர்.
தொழில்முனைவோர் மற்றும் வணிக அமைப்புகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, கிடைக்கக்கூடிய நிதி உதவிகள் மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து நேரடியாக அறிந்து கொண்டு தங்களது தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்ட ஒரு சிறந்த நிகழ்ச்சியாக இது அமைந்தது.



