29.4 C
Kuala Lumpur
Friday, June 26, 2026

Vetri

ஜொகூர் அரண்மனையின் உத்தரவின் அடிப்படையில் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதா?: புவாட் ஷர்காசிக்கு எதிராக போலிசிஸ் புகார்!

🔥 Views : 2,904
👁 Reading Now : 60

ஜொகூர் அரண்மனையின் உத்தரவின் அடிப்படையில் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது என குற்றம் சாட்டியுள்ள புவாட் ஷர்காசிக்கு எதிராக போலிஸ் புகார் செய்யப்பட்டது.

ஜொகூர் மாநில மஇகா தலைவர் ரவீன்குமார் இதனை கூறினார்.

ஜொகூர் மாநில சட்டமன்றம் அரண்மனையின் உத்தரவின் பேரில் தான் கலைக்கப்பட்டது.

மேலும் ஜொகூர் அம்னோ அரச நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி கூறியதாக டத்தோ டாக்டர் முகமது புவாட் ஷர்காஷி குற்றம் சாட்சியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது.

மேலும் டத்தோ ஓன் ஹபிஸ் காசி ஒரு ஊடக அறிக்கை மூலம் இதை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளார்.

அவரின் விளக்கத்தின்படி, ஜொகூர் மாநில சட்டமன்றத்தின் கலைப்பானது, 1895ஆம் ஆண்டு ஜொகூர் அரசியலமைப்பின் இரண்டாம் பகுதியின், பிரிவு 23இன் கீழ் வகுக்கப்பட்ட சட்ட நடைமுறையின் அடிப்படையில் அமைந்தது.

ஜொகூரின் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் முன் ஆஜராகி இந்த விஷயத்தை முன்வைத்து, ஒப்புதல் ஆணையைப் பெற்ற பின்னரே இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டது.

இந்த ஒப்புதல் ஆணை, ஜொகூர் மாநில அரசியலமைப்பின் ஒரு தேவையாகும். இது அரசியல் களத்தில் ஒரு கட்டளையோ அல்லது தலையீடோ அல்ல.

எனவே அரச நிறுவனம் ஜொகூர் மாநில அரசியல் விவகாரங்களில் தலையிடுவது போலவோ அல்லது மாநில சட்டமன்றத்தைக் கலைக்க உத்தரவிடுவது போலவோ சித்தரிக்க முயற்சிக்கும் டத்தோ டாக்டர் முகமது புவாட் சர்காஷியின் செயல் மிகவும் தீவிரமான, தவறான பிரச்சாரமாகும்.

மேலும் இது ஜொகூர் மாநிலத்தில் உள்ள அரசியலமைப்பு அரச நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது.

இதன் அடிப்படையில் தான் புவாட் ஷர்காசிக்கு எதிராக போலிஸ் புகார் செய்துள்ளேன்.

இப்புகாரின் அடிப்படையில்  மாநில போலிஸ் உடனடியாக இவ்விவகாரத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரவீன்குமார் கேட்டுக் கொண்டார். – Nambikkai

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles