28.3 C
Kuala Lumpur
Monday, August 24, 2026

Vetri

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை உச்சக் கட்ட பிரச்சாரம்!

🔥 Views : 2,630
👁 Reading Now : 31

ஜொகூர் பாரு ஜூலை 9-
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தில் உள்ள வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை சிம்பாங் ரெங்காம் வருகிறார்.

நாளையோடு பிரச்சாரம் முடிவடைகிறது. ஜூலை 11 ஆம் தேதி சனிக்கிழமை வாக்களிப்பு தினமாகும்.

இந்நிலையில் நாளை இரவு 7.45 மணிக்கு நடைபெறும் இறுதி கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்கிறார்.

Tanah Lapang Bersebelahan McDonald’s Simpang Renggam என்ற இடத்தில் நடைபெறும் இந்த பிரச்சாரத்தில் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இரமணன் உட்பட பலரும் கலந்து கொள்கிறார்கள்.

லாயாங் லாயாங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பக்கத்தான் ஹராப்பான் கெஅடிலான் வேட்பாளர் குணா பாலகிருஷ்ணனை ஆதரித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட பலரும் களம் இறங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles