
பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள ‘மசால் வீல்ஸ்’ உணவக்கத்தில், இன்று மனிதவள துறை மற்றும் உள்துறை அமைச்சின் அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
தற்போதைய நிலவரப்படி கடை உரிமையாளர் வருகைக்காகக் காத்திருக்கின்றனர்.
இது தொடர்பாக கருத்துரைத்த மனிதவள அமைச்சின் உயர் அதிகாரி ரொஸ்லான், இந்த உணவகம் தொடர்பாக புகார் கிடைத்துள்ளதாகவும், அதன் அடிபடையில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.
அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்னும் நபர், தமிழகத்தின் தனியார் சேனல் ஒன்றில் ‘நேர்கொண்ட பார்வை’ என்னும் நிகழ்ச்சி வாயிலாகப் பல கடுமையான குற்றச்சாட்டுகளை மலேசியத் தமிழ் உணவக உரிமையாளர் மீது வைத்தார்.
அவர் மலேசியாவிக் ஓர் உணவகத்தில் வேலை செய்ததாகவும், அங்குப் பல்வேறு கொடுமைகளை அனுபவித்ததாகவும் அப்பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து தமிழ் லென்ஸ் இதனைச் செய்தியாக வெளியிட்டதோடு, மனித வள அமைச்சின் கவனத்திற்கும் கொண்டு சென்றது.
இதற்கான விசாரணையில் இறங்கிய மனித வள அமைச்சு, சம்பந்தப்பட்ட உணவகத்தின் விவரம் அறிந்து, தற்போது நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட வேலாயுதம் ‘மசால் வீல்ஸ்’ உணவகத்தில் வேலை செய்தது தற்போது தெரியவந்துள்ளது!



