26.4 C
Kuala Lumpur
Wednesday, September 16, 2026

Vetri

பியாலா MKBBT மலேசியா 2026: இளைஞர்களை விளையாட்டின் மூலம் ஒன்றிணைத்த ஃபுட்சால் போட்டியில் டாக்டர் குணராஜ் பங்கேற்பு!

🔥 Views : 3,504
👁 Reading Now : 64

மலேசிய தமிழ் பெல் இளைஞர் மன்றம் (MKBBT Malaysia) ஏற்பாடு செய்த ‘பியாலா MKBBT மலேசியா 2026’ உள்ளரங்க ஃபுட்சால் போட்டி உற்சாகமான சூழலில் நடைபெற்றது.

போட்டியின் இரண்டாவது அமர்வில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் YB டாக்டர் குணராஜ், கிள்ளான் அரச நகராண்மைக் கழக உறுப்பினர் தங்கராஜா, MKBBT Malaysia தலைவர் முருகன் மணியம் மற்றும் துணைத் தலைவர் கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

போட்டியின் முக்கிய கட்டமான அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள், சிறப்பு விருந்தினர்களின் அடையாளப்பூர்வமான ‘Kick-Off’ மூலம் தொடக்கி வைக்கப்பட்டன. அவர்களின் வருகை போட்டியாளர்களுக்கு மேலும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியது.

விளையாட்டின் மூலம் இளைஞர்களை மேம்படுத்துதல், அவர்களிடையே தலைமைத்துவப் பண்புகளை வளர்த்தல், நட்புறவை வலுப்படுத்துதல் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்தப் போட்டி நடத்தப்பட்டதாக MKBBT Malaysia தெரிவித்தது.

குறிப்பாக, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஒரே விளையாட்டுத் தளத்தில் சந்தித்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதுடன், ஒற்றுமை மற்றும் குழு உணர்வையும் வெளிப்படுத்தினர்.

இளைஞர்களின் வளர்ச்சிக்கு விளையாட்டு முக்கியமான தளமாக அமைவதுடன், ஒழுக்கம், தலைமைத்துவம், நட்பு மற்றும் சமூக ஒற்றுமையை வளர்ப்பதற்கும் இதுபோன்ற போட்டிகள் உதவுவதாக நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

“மாநிலத்திலிருந்து மாநிலத்திற்கு; ஒரே விளையாட்டுத் தளம், ஒரே உத்வேகம் – MKBBT இளைஞர்களின் பயணம் தொடர்கிறது” என்ற கருப்பொருளுடன் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

பியாலா MKBBT மலேசியா 2026 போட்டிக்கு ஆதரவு வழங்கி கலந்து கொண்ட டாக்டர் குணராஜ் உள்ளிட்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் MKBBT Malaysia சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles