
சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை 19ஆம் தேதி ஸ்ரீ செத்தியா மற்றும் தாமான் மேடான் தொகுதிகளில் இலவச கோவிட்-19 பரிசோதனை நடைபெறுகிறது.
இந்த வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த பரிசோதனை இயக்கம் ஜாலான் பிஜேஎஸ் 6/1 கம்போங் லிண்டோங்கானில் காலை 9 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாகவும் எனும் https://screening.selangkah.my/login/ அகப்பக்கத்தின் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அவர் கேட்டுக் கொண்டார்.



