
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை மீறியது தொடர்பில் உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் சிலாங்கூர் மாநில பிரிவு 72 வணிகர்களுக்கு 225,000 வெள்ளி அபராதம் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 1ஆம் தேதி முதல் கடந்த புதன் கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையின் போது மைசெஜாத்ரா செயலியை பதிவு இறக்கம் செய்யத் தவறியது, கிருமி நாசினி வைக்காதது, அத்தியாசிய துறைகள் பட்டியலில் இல்லாத கடைகளை திறந்தது, சுய சேவை சலவை நிலையங்களில் பணியாளர்களை நியமிக்காதது ஆகிய குற்றங்களுக்காக அவர்களுக்கு குற்றப்பதிவு வழங்கப்பட்டதாக அமைச்சின் மாநில இயக்குநர் முகமது ஜிக்ரில் அசான் அப்துல்லா கூறினார்.