
சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலத்தில் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் வழங்கி கொண்டிருக்கும் மானியங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பில் சிறப்பு காணொளி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு எத்தனை லட்சம் வெள்ளி மானியங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி மற்றும் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் விளக்கம் அளிப்பார்கள்.
வரும் திங்கட்கிழமை 21ஆம் தேதி இரவு 8 மணிக்கு காணொளி மூலமாக நடைபெறும் இந்த கருத்தரங்கில் சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் மற்றும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மாநில பக்கத்தான் அரசாங்கம் வழங்கி வரும் மானியங்கள் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு முக்கிய பங்காற்றி வருகின்றன. அந்த வகையில் கடந்த 13 ஆண்டுகளாக பினாங்கு மற்றும் சிலாங்கூர் அரசாங்கம் எத்தனை கோடி வெள்ளியை தமிழ் பள்ளிகளுக்கு வழங்கி உள்ளன என்பது குறித்து இந்த சிறப்பு காணொளியில் பொதுமக்கள் வெளிப்படையாக தெரிந்து கொள்ளலாம்.