
பினாங்கு மாநில சட்டமன்றக் கூட்டத்தை நடத்துவதற்கு,மாமன்னரை பினாங்கு
மாநில அரசாங்கம் கேட்டுக் கொள்ளுமென மாநில முதல்வர் சோவ் கோன்
யோவ் தெரிவித்தார்.2021 முழு நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையத்திற்காக
ஒதுக்கப்பட்டுள்ள நிதியை பயன்படுத்துவற்கு மாநில அரசாங்கம் விருப்பம்
கொண்டுள்ளதாக அவர் கூறினார்.இந்நிதியை முறையாக நல்ல வகையில்
பயன்படுத்த வேண்டும்.மேலும் கோவிட் -19 தொற்றை துடைத்தொழிப்பதை
உறுதிப்படுத்த வேண்டுமென கடந்தாண்டு அக்டோபர்
மாதத்தில் நடைபெற்ற மாநில சட்டமன்றக் கூட்டத்தில் பேசப்பட்டதாக
சோவ் சொன்னார்.நாட்டில் முழு நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை மற்றும்
நாட்டின் பொருளாதார மீட்சி திட்டங்கள் குறித்து பேசுவதற்கும்,மாநில
சட்டமன்ற கூட்டத்தை நடத்த மாமன்னர் மனம் திறப்பார் என சட்டமன்ற
உறுப்பினர்கள்,மாநில அரசாங்கமும் ஆவலுடன் எதிர்ப்பார்ப்பதாக கூறினார்.