
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவ இப்போது அதிகளவில் ரத்தம் தேவைப்படுவதால் தேசிய இரத்த வங்கியின் வேண்டுகோளை ஏற்று நாளை ஞாயிற்றுக்கிழமை பத்துகேவ்ஸ் கெனிசன் பிரதர்ஸ் அருள்மிகு முனீஸ்வரர் ஆலயத்தில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஆலய செயலாளர் உதயகுமார் தெரிவித்தார்.
காலை 8 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த ரத்ததான முகாமில் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
Sop விதிமுறைகளுக்கு உட்பட்டு ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
