25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

பூக்கடை தொழிலில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடுதான் என்ன ? டாக்டர் ராமசாமி கேள்வி

🔥 Views : 9
👁 Reading Now : 56

நாட்டில் பூ விற்பனைத் துறைக்கு அரசாங்கம் விதித்து வரும் உறுதியற்ற
அறிவிப்புகளால் வியாபாரிகள் இன்னல்களையும்,வேதனைகளையும்
எதிர்நோக்கி வருகின்றனர்.
முழு நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் கீழ்
அத்தியாவசியமற்ற பொருட்களின் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடைகளில் பூ வியாபாரமும் அடங்கும் என பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி கூறினார்.
இந்த விவகாரத்தில் அமைச்சர்
டத்தோஸ்ரீ எம்.சரவணன் பல நடவடிக்கைகளை எடுத்தாக கூறி அறிவிப்பை செய்தார். இருப்பினும் பூ விற்பனைக்கு இன்னும் பல்வேறு நிபந்தனைகள் தொடர்ந்த வண்ணமாக உள்ளது.
அவரது தலையீடு பூ வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு ஏதேனும் தவறான நம்பிக்கையை ஏற்படுத்தியதா அல்லது
குழப்பதை மேலும் அதிகரித்ததா என அவர் கேள்வியெனுப்பினார்.
டத்தோஸ்ரீ சரவணன் வெளியிட்ட அறிவிப்பு மற்றும் பூ வியாபாரம் செய்பவர்களுக்கு இது நம்பிக்கையை தர முடியுமா என்பது குறித்து தாம் சில பதில்களை தேடி வருவதாக பேராசிரியர் பி.இராமசாமி சொன்னார்.
தேசிய பாதுகாப்பு மன்றம் விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடு காரணாமாக இவ்விஷயத்தை மேலும்
சிக்கலாக்குமா ? எனவும் கேள்வியெழுப்பினார் .நாட்டின் உண்மையான
நிலைமை என்ன ? பூ தொழில் மீண்டும் செயல்பட முடியுமா எனவும் அவர் வினவினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles