
பெட்டாலிங் ஜெயாவில் உணவகத்தில் வேலை செய்த இந்திய தொழிலாளர்கள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மலேசியா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் பக்குருடின் தெரிவித்தார்.
தமிழகத்தில் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த வேலாயுதம் என்ற இந்தியத் தொழிலாளி இந்த உணவகத்தில் வேலை செய்தபோது சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் மற்றொரு
தமிழகத் தொழிலாளிக்கு தீப்புண் காயம் ஏற்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்திய போலீஸார் அந்த உணவகத்தில் பணிபுரிந்த மலேசிய பிரஜை ஒருவரை கைது செய்திருப்பதாக சொன்னார்.
இவர் இந்த உணவகத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஆவார்.
இவர் மீது ஏற்கெனவே 6 குற்றச்செயல் புகார்கள் உள்ளன.
இந்த ஆடவர் விசாரணைக்காக ஆறு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
இதனிடையே, சித்திரவதைக்கு ஆளான மேலும் இரண்டு இந்திய பிரஜைகளும் காப்பாற்ற பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இவர்கள் இந்த உணவகத்தில் பணிபுரிந்த முன்னாள் தொழிலாளர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
