
கோவிட் – 19 காரணமாக அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும் முழு நடமாட்ட கட்டுப்பட்டுக் காரணமாக வெளியில் செல்ல முடியாமலும்,நிரந்தர வேலை இல்லாமலும் சிரமப்படும் குடும்பங்களுக்கு பினாங்கு மாநிலத்தில் பிரபலமான சுபம் கேஸ் அண்ட் கேரி நிறுவனம் உதவிப் பொருட்களை வழங்கியது.
நிபோங் திபாலிலுள்ள அதன் கிளை நிறுவனத்தின் சார்பில் இவ்வட்டாரத்திலுள்ள திரான்ஸ் கிரியான் தோட்டம், கலிடோனியா தோட்டம், கிரியான் தோட்டம், விக்டோரியா தோட்டம், சங்காட் தோட்டம்,
சுங்கை கிச்சில், சுங்கை பாக்காப்,தாமான் செண்டராவாசே,கம்போங் ஸ்டேஷன்,செம்பா தோட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பி40 பிரிவு குடும்பங்களுக்கு கட்டங்கட்டமாக இந்த மனிதாபிமான உதவி வழங்கப்படுவதாக நிறுவனத்தின் உரிமையாளரும்,தொழிலதிபருமான முருகேசன் தெரிவித்தார்.

செபராங் பிறையிலுள்ள பட்டர்வொர்த் மற்றும் பிறை கிளை நிறுவனத்தின் சார்பிலும் அவ்வட்டார மக்களுக்கும் இதுபோன்ற உதவிகளை வழங்குவதாகவும் மேலும் சொன்னார்.
