
கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஒரே குடும்பமாக இருந்தது பணியாற்ற வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ரஹிம் வேண்டுகோள் விடுத்து இருப்பதை வரவேற்பதாக நெகிரி மாநில துணை சபாநாயகர் டத்தோ எம் ரவி, பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கருப்பையா, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர் சிவராசா, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், ஜொகூர் உலு திராம் சட்டமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அடுத்த இலக்கை நோக்கி பயணம் செய்வோம் என்று டத்தோஸ்ரீ அன்வார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது சரியான நேரத்தில் விடுக்கப்பட்ட அறிவிப்பாகும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
நாட்டு மக்கள் நோய்த்தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு முறையாக தடுப்பூசி வழங்கப்படவில்லை என்பது உண்மையே! நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதில் இந்திய உட்பட மற்ற நாடுகள் பெருமளவில் பங்காற்றி வருகின்றன.
நாட்டில் இந்நேரம் 70 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இந்த இலக்கு வெற்றி பெறவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
மக்களை பாதுகாக்கும் அரசாங்கம் மலர வேண்டும்.நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்களின் ஆதரவோடு மக்கள் பணி ஆற்றுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
