25.6 C
Kuala Lumpur
Thursday, October 8, 2026

Vetri

இன்று தொடங்கி 14 நாட்களில் நாடாளுமன்றத்தை கூட்டுங்கள்! அரசுக்கு அம்னோ அவகாசம்

🔥 Views : 34
👁 Reading Now : 64

இன்று தொடங்கி 14 நாட்களில் நாடாளுமன்றத்தை கூட்டும் படி அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தை கூட்டும்படி பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு 14 நாட்கள் அவகாசம் வழங்குகிறோம்.
இந்த 14 நாட்களில் கண்டிப்பாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் தலைமையில் நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றம் உடனடியாக கூட்டப்பட வேண்டும் என முடிவு காணப்பட்டது.
மலாய் ஆட்சியர்கள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் மதிக்க வேண்டும். இதில் நாங்கள் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறோம். ஒருவேளை நாடாளுமன்றத்தை கூட்ட தவறினால் அது மலாய் ஆட்சியாளர்களை மதிக்கத் தவறியதாக பொருள்படும் என்று அவர் எச்சரித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles