24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மாநிலம் கடக்க அனுமதி பரிசீலனை

🔥 Views : 8
👁 Reading Now : 69

நாட்டில் இரண்டு தடுப்பூசிகளை முழுமையாக பெற்றவர்களுக்கு மாநில, மாவட்ட எல்லைகளை கடப்பது ப தொடர்பில் பரிசீலிக்கலாம் என்று அறிவியல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்
சில தளர்வுகளையும் சுதந்திரத்தையும் வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான கூறினார்.
தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்புக் குழுவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சுகாதார மற்றும் அறிவியல் நிபுணர்கள் அடங்கிய நுட்பக் குழு இவ்விவகாரம் தொடர்பில் விரிவான ஆய்வினை மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.
அந்த ஆய்வின் முடிவுகள் தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் சமர்பிக்கப்பட்டு இதன் தொடர்பான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles