28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

காவல் கைதி கணபதி மரணம் தொடர்பில் மலேசியா கினி நிருபர் நந்தாவிடம் போலீஸ் விசாரணை

🔥 Views : 10
👁 Reading Now : 54

காவல் கைதி கணபதி மரணம் தொடர்பில் மலேசியா கினி நிருபர்
நந்தாவிடம் போலீஸ் விசாரணை

போலீசாரால் கைது செய்யப்பட்ட பின்னர் மரணமுற்ற காவல் கைதி கணபதி தொடர்பில் செய்திகளை வெளியிட்ட மலேசிய கினி இணையத்தள நிருபர் பி. நந்தகுமாரிடம் போலீசார் இன்று காலையில் வாக்குமூலம் பதிவு செய்தனர். இதற்கு முன்னர் கணபதி மரணம் தொடர்பில் மேலும் இரு மலேசிய கினி நிருபரிடம் புக்கிட் அமான் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
இன்று மலேசிக் கினி அலுவலத்திற்கு வந்த போலீசார் நிருபர் நந்தகுமாரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
கடுமையாகத் தாக்கப்பட்டதால் காவல் கைதி கணபதி மரணமடைந்ததாக சவப் பரிசோதனை அறிக்கை முடிவுகள் காட்டுவதாக செய்திகள் வெளியிடப்பட்டது தொடர்பில் மலேசியக் கினி நிருபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles