
மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவர், அவரது உடல் நிலை காரணமாக உள்ளூர் பொது உயர்க்கல்வி நிறுவனத்தில் தனது படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாணவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை அக்கறைகொண்ட யு.எம். இந்தியப் பட்டதாரிகள் மாணவர்கள் குழு தெரிவித்துள்ளது.
இந்தக் குழு உயர்க்கல்வி அமைச்சர் நோராய்னிக்கு அனுப்பியக் கடிதத்தை வெளியிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டில், எஸ்.பி.எம் தேர்வில் 9ஏ பெற்ற இந்த மாணவர்
உயர் கல்விக் கூடத்தில் படிப்பதற்கு நேர்காணல்களில் கலந்துகொண்டதோடு, வீடியோ சமர்ப்பிப்புகள் உட்பட தேவையான அனைத்து ஆவணங்களையும் இவர் வழங்கியுள்ளார்.
இருப்பினும், யுபியுஓன்லைன் (UPUOnline) புதுப்பித்தல் கட்டத்தில், முன்னதாக செய்யப்பட்ட தேர்வு பாடங்கள் காலியாக இருந்ததையும் கண்டறிந்தார்.
அதே நேரத்தில், அவரது தகுதி பட்டியலில் இரண்டு டிப்ளோமா திட்டங்களும் 20 சமூகக் கல்லூரி சான்றிதழ் திட்டங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதையும் காட்டியது.
20 பொது பல்கலைக்கழகங்கள், 36 பாலிடெக்னிக் மற்றும் நான்கு பொதுத்திறன் பயிற்சி நிறுவனங்கள் (மலேசியாவில்) இருந்த போதிலும், உடல் இயலாமை காரணமாக இவ்விரு இரண்டு டிப்ளோமா திட்டங்களுக்கும் சமூகக் கல்லூரி சான்றிதழ் திட்டங்களுக்கும் மட்டுமே விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது,
யுபியுஓன்லைன் என்பது பொது பல்கலைக்கழகப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க ஓர் இயங்கலை விண்ணப்ப முறையாகும்.
2021/2022 கல்வி அமர்வுக்கான தேர்வு முடிவுகளின் அடிப்படையில் எஸ்பிஎம் பட்டதாரிகள் தங்கள் விண்ணப்பங்களைப் புதுப்பிக்க ஏதுவாக யுபியுஓன்லைன் புதுப்பிப்பு கட்டம் ஜூன் 15 முதல் ஏழு நாட்களுக்குத் திறந்திருந்தது.
பின்னர், அக்காலக்கெடு ஜூலை 2 வரை நீட்டிக்கப்பட்டது.
அவருக்குத் தகுதிகள் இருந்தாலும், ஒரு பல்கலைக்கழகப் படிப்பு திட்டத்தைத் தேர்வு செய்ய முடியாது, காரணம் அவர் விண்ணப்பித்த பாடத் திட்டத்திற்குக் குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கான வசதிகள் இல்லை என்று பணியில் இருந்த அதிகாரி அந்த மாணவருக்கு பதில் கூறியுள்ளார் என்பது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
