26 C
Kuala Lumpur
Sunday, September 20, 2026

Vetri

சிசுவிற்கு மதுபானம் கொடுத்த ஆடவர் மீது நடவடிக்கை தேவை!

🔥 Views : 44
👁 Reading Now : 27

ஆடவர் ஒருவர் சிசுவிறகு மதுபானம் கொடுத்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் பினாங்கு தெலோக் பஹாங் என்னும் பகுதியில் நடத்திருப்பதாக, மலேசிய மலிவு மதுபான துடைத்தொழிப்பு நடவடிக்கை இயக்கத்தின் தலைவர் டேவிட் மார்ஷெல் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, பெராய் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த டேவிட், அந்தக் குழந்தையை அந்த நபரிடம் இருந்து மீட்பதோடு, அந்தக் குழந்தையின் உடல் நிலை தொடர்பாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

அதோடு, மகளிர் குடும்ப சமூகநல மேம்பாட்டு அமைச்சர் இதற்குத் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என டேவிட் மார்ஷல் கேட்டுக்கொண்டார்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles