26 C
Kuala Lumpur
Sunday, September 20, 2026

Vetri

35 எண்ணுடன் தந்தையர் தினத்தை கொண்டாடிய சம்பவம்! இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

🔥 Views : 43
👁 Reading Now : 54

35 ” என்ற எண்ணை எழுதி கேக் வெட்டி தந்தையர் தினத்தை கொண்டாடிய சம்பவம் தொடர்பில் 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் கூலிமில் வீடொன்றில் தந்தையர் தினத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை டிக்டோக் செய்து வெளியிடப்பட்டிருந்ததாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமாருள் ஸாமான் பின் மாமாட் தெரிவித்தார்.
சுமார் 44 விநாடிகள் காணொளியில் அந்த கொண்டாடட்டத்தில் மொத்தம் 15 பேர் கூடியிருக்கலாம் என தெரிவித்த அவர் விசாரணைக்காக 25 வயதிலிருந்து 61 வயதுக்குட்பட்ட ஒன்பது ஆண்களையும் இரு பெண்களையும் கைது செய்ததாக சொன்னார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறும் வகையில்,கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஒரு மீட்டர் இடைவெளியை பின்பற்ற தவறியதாகவும் சொன்னார்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 35 கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுவதாக கூறிய அவர் மேல் விசாரணைக்காக நீதிமன்ற ஆணையைப் பெற்று அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என டத்தோ கமாருள் ஸாமான் பின் மாமாட் மேலும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles