29.7 C
Kuala Lumpur
Saturday, September 19, 2026

Vetri

லோரி ஓட்டுநர் தாக்கப் பட்ட சம்பவம்! இரு உணவு விநியோகிப்பாளர் கைது

🔥 Views : 50
👁 Reading Now : 28

லோரி ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு உணவு விநியோகிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உணவு விநியோக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 20 மற்றும் 25 வயதுடைய அவ்விருவரும் ஷா ஆலமில் கைது செய்யப்பட்டதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் பகாருடின் மாட் தாயிப் கூறினார்.
செத்தியா ஆலம், ஜாலான் பெர்சியாரான் செத்தியா ஆலமில் உணவு விநியோகிப்பாளர் பயணித்த மோட்டார் சைக்கிளும் லோரியும் மோதிக் கொண்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட லோரி ஓட்டுநரை உணவு விநியோக நிறுவன பணியாளர்கள் அடங்கிய கும்பல் தாக்கியதாக அவர் சொன்னார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் இருவரை கைது செய்துள்ளோம்.
இதர சந்தேகப்பேர்வழிகளை தேடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம் என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles