26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

ஆகஸ்ட் 12 இல் ஜொகூர் சட்டமன்ற கூட்டத் தொடர் சுல்தான் இப்ராஹிம் அறிவிப்பு

🔥 Views : 10
👁 Reading Now : 27

வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி ஜொகூர் மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் அதிகாரப்பூர்வமாக தொடங்கும் என்று சுல்தான் ஜொகூர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தார் இன்று அறிவித்தார். குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் ஜொகூர் சட்டமன்றத்தின் நான்காம் கூட்டத்தொடரை சுல்தான் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார்.
ஜொகூர் மாநில மக்களின் நன்மை கருதி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும்.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் ஜொகூர் மாநில மக்களுக்கு உதவும் வகையில் மேற்கொள்ளப்படும் மீட்சி திட்டங்கள் பாதிக்கப்படக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போது மக்கள் நோய்தொற்று தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.
இந்த நோய்ததொற்று இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதும் தமக்கு வேதனை தருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles