24.7 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

முக்கிய தேர்வு எழுதும் மாணவர்கள் பள்ளி செல்ல அனுமதி!

🔥 Views : 39
👁 Reading Now : 40

முக்கிய தேர்வுகளை எழுதும் மாணவர்களை தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்ட நிலை அமல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே பள்ளிக்குச் செல்ல அனுமதிப்பது தொடர்பான பரிந்துரையை கல்வியமைச்சு தேசிய பாதுகாப்பு மன்றத்திடம் முன்வைத்துள்ளது என்று கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ரட்ஸி ஜிடின் தெரிவித்தார்.
இந்த கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் ஆசிரியர்கள் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தும்படி தடுப்பூசி சிறப்புக் குழுவிடம் கல்வியமைச்சு விண்ணப்பித்துள்ளது என்று அவர் கூறினார்.
எனினும், இவ்விவகாரம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தேசிய பாதுகாப்பு மன்றத்திற்கே உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தையும் சிறப்புக் குழுவால் எளிதில் மேற்கொள்ள இயலும் என்றார் அவர்.
மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை பள்ளியில் அல்லது வேறு இடத்தில் மேற்கொள்வது குறித்து தாங்கள் விவாதித்து வருவதாகவும் அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles