25.3 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

தோட்டத் தொழிலாளர்களின் சுகாதார நலனில் தோட்ட நிறுவனங்களின் நிலைப்பாடு என்ன ?

🔥 Views : 10
👁 Reading Now : 43

கோவிட் – 19 தொற்றினால் நாடு பல்வேறு சோதனைகளை எதிர்நோக்கி
வரும் நிலையில் அதனை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளையும்
மேற்கொண்டு வரும் வேளையில்,நாட்டிலுள்ள தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக தோட்டங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளன என தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பேரா மாநில முன்னாள் துணைத் தலைவர் இராமலிங்கம் பகிங்கர கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த ஒரு மாதமாக நாடு முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில் இருந்து வருகிறது.அதற்கு அரசாங்கம்,சுகாதார அமைச்சு,தேசியப் பாதுகாப்பு மன்றம் பல விதிமுறைகளை அமல்படுத்தி மிகவும் கடுமையான செயலில் இறங்கியுள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தோட்டப்புறமக்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்குவதற்கு தோட்ட நிறுவனங்கள் எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் விதிப்படி தடுப்பூசி செலுத்துவது முக்கியமான ஒன்றாக உள்ளது. தோட்டப் புறங்களில் அதனை மேற்கொள்வதற்கு இதுவரையில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அவர் வினவினார்.
தோட்டப்புற மக்களின் சுகாதார நலனில் இனியும் அலட்சியம் காட்டாமல் தோட்ட நிறுவனங்கள் விரைந்து செய்லபட வேண்டுமென பாகான் செராயைச் சேர்ந்த இராமலிங்கம் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles