27.9 C
Kuala Lumpur
Tuesday, August 18, 2026

Vetri

மலேசியர்களுக்கு தடுப்பூசி இலவசம்

🔥 Views : 39
👁 Reading Now : 37

இந்நாட்டில் அனைத்து மலேசியர்களுக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது என்று அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் அனைத்து மலேசியர்களுக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. யாருக்கும் கட்டணம் விதிக்கப்படவில்லை. தடுப்பூசி மையங்கள் மற்றும் தனியார் மருத்துவர்களிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டால் கூட எந்த கட்டணமும் இல்லை என்று அவர் சொன்னார்.
தனியார் நிறுவனம் ஒன்று இரண்டு தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு 200 வெள்ளி கட்டணம் விதிப்பதாக அண்மையில் மலேசியா மருத்துவர் சங்கம் புகார் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles