29 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

சிலாங்கூரில் 180 கோயில்களுக்கு நிலம் கணபதி ராவ் அறிவிப்பு

🔥 Views : 6
👁 Reading Now : 67

சிலாங்கூர் மாநில பக்காத்தான் அரசாங்கம்
180 கோயில்களுக்கு நிலம் வழங்கியிருப்பதாக ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் இன்று AST செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்
கடந்த 8 ஆண்டுகளில் ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில் ஏராளமான இந்து கோவில்களுக்கு மிகப் பெரிய அளவில் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
நிலம் இல்லாத பல கோயில்களுக்கு நிலப்பதிவு பெற்று மாநில அரசாங்க நிலப் பதிவேட்டில் கெஜட் செய்யப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்
எனக்கு முன்னால் இருந்த சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் 15 கோயில்களுக்கு நிலப்பதிவு பெற்றுத் தந்துள்ளார்.
இப்போது இந்த எட்டு ஆண்டுகளில் 180 கோவில்களுக்கு நிலப்பட்டா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
பெட்டாலிங் ஜெயா சிவன் ஆலயத்திற்கு நிலப்பதிவு பெற்றுத்தந்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சிலாங்கூர் மாநிலத்தில் மேம்பாட்டு திட்டத்தினால் பல கோயில்களுக்கு
பிரச்சினைகள் ஏற்பட்ட போதெல்லாம் உடனடியாக தீர்வு கண்டுள்ளேன்.
ஹிண்டராப் போராட்ட காலத்தில் இருந்து இந்தியர்களின் உரிமைகளுக்காகவும் முழுமையாக போராட்டம் நடத்தியுள்ளேன்.
இப்போதும் என் பணியை திறம்பட ஆற்றி வருகிறேன் என்று வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் தமிழ் பள்ளிகளுக்கும் இந்து கோயில்களுக்கும் மிகப்பெரிய மானியம் ஒதுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநில அரசாங்கம் இந்தியர்களின் மீது அதிக அக்கறை கொண்டிருப்பதாக அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles