
லோக் டவுன் மற்றும் நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு இப்படியே போய்க்கொண்டிருந்தால் நாட்டில் இருக்கின்ற உணவகங்கள் இழுத்து மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்று இந்தியா கேட் உணவகத்தின் உரிமையாளர் சரவணன் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும் நான்காவது முறையாக கடுமையான நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது இதனால் உணவக உரிமையாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
covid-19 தொற்று காரணத்தால் நாங்கள் முதல்முறையாக எங்களது உணவகத்தை மூடவில்லை இது ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது.
இந்த விவகாரத்திற்கு அரசாங்கம் வெகு விரைவில் தீர்வு காணவில்லை என்றால் தமது உணவகம் மட்டுமல்ல தன்னைப்போல நாட்டில் உணவக துறையில் கால் பதித்து இயங்கிவரும் ஏராளமானவர்கள் திவால் ஆக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகி விடும் என்றார் அவர்.
முதன் முதலாக நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்ட போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அதனால் எங்களது வியாபாரம் சரிந்தது. அதைப்பற்றி நாங்கள் பெரிதாக ஒன்றும் கவலைப்படவில்லை கையில் இருந்த பணத்தை எல்லாம் போட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். அதன் பிறகு அடுத்த கட்ட நடமாடும் கட்டுப்பாடு உத்தரவு எங்களை சற்று நிலைகுலைய வைத்தது. அதையும் பொறுத்துக் கொண்டு தொடர்ந்து வியாபாரத்தை கவனிக்க முயற்சி செய்தோம்.

இப்போது மூன்றாம் கட்ட நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறோம்.
நிலைமை இப்படியே போனால் கடையை மூடிவிட்டு சம்பாதித்த பணத்தையெல்லாம் இழந்து விட்டு வீட்டுக்கு போக வேண்டிய சூழல் தான் ஏற்படும் என்றார் அவர்.
கோவிலட் தொற்று பரவுகிறது அதை நாங்கள் மறுக்கவில்லை இருந்தபோதிலும் எங்கள் நிலையையும் கருத்தில் கொண்டு ஒரு நல்ல தீர்வை கொடுக்க வேண்டும் என்றுதான் அரசாங்கத்தை நாடுகிறோம் என்றார் அவர்.



