33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

அவசர காலத்தை நீட்டிக்க தேவையில்ல! பக்காத்தான் தலைவர்கள் வேண்டுகோள்

🔥 Views : 10
👁 Reading Now : 69

ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகு, அவசரகாலத்தை நீட்டிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் பக்காத்தான் ஹராப்பான் தலைமை மன்றம் உறுதியாக உள்ளது.
பி.கே.ஆர். டத்தோஸ்ரீ தலைவர் அன்வார் இப்ராஹிம், அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் இன்று கூட்டாக தெரிவித்துள்ளனர்.
அவசரநிலை உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பக்காத்தான் உறுதியாக இருப்பதாக அவர்கள் கூறினர்.
, கோவிட் -19 நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளுக்கு அவசரநிலை உதவவில்லை என்பதே இதற்குக் காரணம், உண்மையில், கோவிட் -19 தொற்றுநோய் எண்ணிக்கை ஜனவரி 11-ல் அவசரநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளது.
அறிவியல் சான்றுகளும் தரவுகளும், அவசரகால நிலை நேர்மறையான நிகழ்வுகளின் எண்ணிக்கையுடன், அன்றாட மரணங்கள் அதிகமாக இருப்பதால், தொற்று நிலைமை கவலைக்கிடமாக மோசமடைந்துள்ளது என்பதனையே காட்டுகிறது,” என்று அவர்கள் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles