27.9 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

நடு வீதியில் வாழ்ந்த குடும்பம் நடு வீட்டில் குடி அமர்த்தப்பட்டனர்

வீடு வாசலின்றி நடு ரோட்டிற்கு வந்த குடும்பம்,மலேசிய தமிழர் குரல்
இயக்கத்தின் உதவியுடன் நடு வீட்டில் குடி அமர்த்தப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கெடா சுங்கை கோப் பகுதியில் விளையாட்டுத் திடலின் கொட்டகை ஒன்றில் இந்தியக் குடும்பம் ஒன்று வாழ்த்து வருவதாக கேள்வியுற்ற மலேசிய தமிழர் குரல் இயக்கத்தின் தேசியத் தலைவர் டேவிட் மார்ஷெல் நேரில் சென்று குடும்பத்துக்கு உடனடி உதவிகளை வழங்கினார்.
உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய அவர் அதே பகுதியில் கலைச்செல்வன்- சசிகலா தம்பதியருக்கு வாடகை வீடொன்றையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
வீட்டிற்கு முன் பணம் செலுத்துவதற்கும், இரண்டு மாத வாடகை பணத்தையும் செலுத்துவதற்கு பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி 2 ஆயிரம் வெள்ளியை வழங்கி உதவியதாக டேவிட் மார்ஷெல் கூறினார்.


தற்போது அந்த வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பத்துக்கு பல வகையில் உதவிகள் வழங்கிய பாடாங் செராய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கருப்பையா, மஇகா,அரசியல் சார்பற்ற இயக்கங்கள் யாவற்றிற்கும் அவர் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles