33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

தோட்டத் தொழிலாளர்களின் நலன் அவசியம் பாதுகாக்கப்பட வேண்டும்

🔥 Views : 8
👁 Reading Now : 58

நாடு எதிர்நோக்கியிருக்கும் கோவிட் -19 தொற்றின் காரணமாக அரசாங்கம் அமல்படுத்தியுள்ள முழு நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் தோட்ட தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகளில் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்னவென்று தேசியத் தோட்டத் தொழிற்சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவர் நடராஜன் குமரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
கோவிட் -19 தொற்றிலிருந்து அனைவரும் விடுபட அரசாங்கம் நாடு தழுவிய நிலையில் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதுபோன்ற நடவடிக்கைகள் தோட்டப்புறங்களில் எந்த அளவிற்கு செயல்படுத்தப்படுகிறது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு இதில் எப்படிப்பட்ட முன்னுரிமைகள் வழங்கப்படுகிறது என அவர் கேள்வியெழுப்பினார்.
எனவே நகர்ப்புறம்,கிராமப்புறம் போன்ற பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் கோவிட் -19 தொற்றுக்கான சுகாதார பாதுகாப்புப் போன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென நடராஜன் நினைவுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles