
நாட்டில் கட்டுமானத் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு
தடுப்பூசி ஜூலை 1 முதல் தொடங்குகிறது.
இந்தத் துறைக்கான தடுப்பூசி திட்டம், கட்டுமான தளங்கள் மற்றும் பி.கே.பி. அமலாக்கத்தின் போது செயல்பட்டு வரும் கட்டுமான திட்டங்களில் கவனம் செலுத்தும் என தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் சொன்னார்.
இப்போது செயல்பட்டு வரும் அனைத்து முக்கியமானப் பொருளாதாரத் துறைகளிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம், என்று அவர் தெரிவித்தார்.
